கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் ‘பேர்பீல்ட்’ நிறுவனம் சார்பில் ‘வாகை’ எனும் புதிய வீட்டுமனை விற்பனை துவக்க விழா நடந்தது. சின்னத்திரை நடிகை சுஜிதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘பேர் பீல்டு ஷெல்டர்ஸ்’ நிறுவனம், ‘வாகை’ எனும் பெயரில், தெலுங்குபாளையத்தில் லே – அவுட் அறிமுகம் செய்துள்ளது.
கோவை ‘நல்லறம்’ அறக்கட்டளையின் தலை வர் அன்பரசன், அறிமுகம் செய்து வைத்தார். நடிகை சுஜிதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அறிமுக சலுகையாக, இந்த லே-அவுட்டில் வீட்டு மனை வாங்கியோருக்கு, 8 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. இச்சலுகை, அட்சய திருதியை வரை நீட்டிக்கப் பட உள்ளது.
“வங்கிக் கடன் வசதியுடன், வீடு கட்டி குடியேற தயார் நிலையில் உள்ள லே-அவுட்டில், கண்காணிப்பு கேமரா, விசாலமான தார் சாலைகள், தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டீ.டி.சி.பி., மற்றும் ‘ரெரா’ அங்கீகாரம் பெற்றுள்ளது,” என பேர் பீல்டு ஷெல்டர்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துக் குமார் தெரிவித்தார்.
டெக்னி கிராப்ட்ஸ் இயக்குனர் தங்கராஜ், மருத்துவர் குறிஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.





