இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் இன்று சாமி தோப்பு தலைமை பதிக்கு வருகை தந்து அய்யாவை தரிசனம் செய்தார். மேலும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியின் தலைமை குரு பாலப்பிரஜாதிபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வி.நாராயணன் கூறுகையில், தன் மீது நம்பிக்கை வைத்து நியமனம் செய்த பிரதமர் உட்பட விண்வெளி துறையினர் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


