பொதுமக்களுக்கு அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி கே சசிகலாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை விளச்சேரி பகுதியில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பா V.K.சசிகலா பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்துகொண்டார். மற்றும் பல கட்சி மற்றும் சங்கம் சார்பாக தலைவர்கள் கலந்துகொண்டு சசிகலா வாழ்த்துரை வழங்கி தங்களது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து விளச்சேரி பகுதியைச் சேர்ந்த பல்வேறு துறையில் சிறப்பான பணியாற்றிய 7 நபர்களுக்கு புரட்சிதாய் சின்னம்மா விருது வழங்கப்பட்டது. மற்றும் 250 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவியாக போர்வை வழங்கப்படாது.

விழாவில் பேசிய ஐயப்பன் எம்எல்ஏ கூறுகையில் அதிமுகவிற்கு மீண்டும் சசிகலா அவர்கள் வரவேண்டும் கட்சிக்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் அதிமுகவை நான்கு தருதலைகள் நாசமாக்கி உள்ளனர் அவர்களிடமிருந்து கட்சியை காப்பாற்ற சின்னம்மா வர வேண்டும் என ஐயப்பன் MLA கூறினார்.