• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி மகளிர் குழு பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி..!

ByP.Thangapandi

Nov 11, 2023

உசிலம்பட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழு பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வள மைய கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உசிலம்பட்டி வட்டார அளவிலான மகளிர் குழு பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் உள்ள 18 கிராம ஊராட்சிகளிலிருந்து மகளிர் குழு பெண்கள் ஊட்டச்சத்து உணவுகளான கம்மங்கூல், கேப்பை ரொட்டி, முளைகட்டிய பயிறு வகைகள், கேப்பை புட்டு, சத்துமாவு புட்டு, கேப்பை பணியாரம் என பல்வேறு வகையான இயற்கை உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.,
இந்நிகழ்வில் உசிலம்பட்டி வட்டார இயக்க மேலாண்மை அழகு இந்தியன் வங்கி கிளையின் மேலாளர் பாபு பிச்சை, வட்டார இயக்க மேலாளர் இலக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து உணவுகளை ஆய்வு செய்து, அதில் சிறந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவின் நன்மைகளை எடுத்துரைத்த நக்கலப்பட்டி, போத்தம்பட்டி, நடுப்பட்டி என முதல் மூன்று கிராம ஊராட்சியைச் சேர்ந்த மகளீர் குழு பெண்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினர்.,