மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி பிந்து ஸ்ரீ. இவர் மலேசியாவில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு சிலம்பாட்ட பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






