தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூடுதல் தலைமை நிலையச் செயலாளர் ராஜேஷ்லக்கானி அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது..,
தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். பேரிடர்களை கையாள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மீட்பு பணிக்குத் தேவையான உபகரணங்களை தயாராக வைத்திருப்பது அவசியம். மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
