• Mon. Apr 29th, 2024

கோவையில் வேட்புமனு மறு பரிசீலனையில் சலசலப்பு- அண்ணாமலை வேட்புமனுவில் தவறுகள் உள்ளதாக பல்வேறு கட்சியினர் தெரிவிப்பு…

BySeenu

Mar 28, 2024

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று வரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார், மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில், இந்த பரிசீலனை நடைபெற்றது.

இதில் அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரு வேட்பு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.மற்றொரு வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலையின் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும் நம்பர்:26 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசை படுத்தவில்லை எனவும் வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை எனவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர்.

அதிமுக , திமுக, நாம் தமிழர் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கிராந்தி குமார் பாடி முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தனர். அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் அறையில் சலசலப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.

இது குறித்து கட்சியினர்கள் கூறுகையில், தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே சமயம் பாஜக வினர் அதிகாரிகளே அண்ணாமலையில் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறினர்.

பேட்டி அளித்தவர்கள்

நாகராஜ்- பாஜக

ரமேஷ்- பாஜக

கலாமணி(வேட்பாளர்)- நாம் தமிழர்

ராகுல் காந்தி(வேட்பாளர்)- ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி

வழக்கறிஞர்- அதிமுக

வழக்கறிஞர்- திமுக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *