• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யூபிஐ மூலம் மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெறும் வசதி

Byவிஷா

Jan 29, 2024

சென்னையில் மாநரகப் பேருந்துகளில் யூபிஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்தி பயண சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் நடத்துனர்களுக்கு யூபிஐ மற்றும் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் வாங்கும் வகையிலான புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில் பயணிகள் ஏறும் இடம் மற்றும் சேரும் இடத்தை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படும். சோதனையை திட்டமாக தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது வெற்றி பெற்றால் சென்னையில் உள்ள மற்ற பணிமனைகளுக்கும் இந்த கருவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.