• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

Byவிஷா

Jun 3, 2025

நாளை (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 பஹல்காம் படுகொலைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து இந்த வாரம் நடைபெறும் முதல் கூட்டமாகும். முன்னதாகஇ ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்த நிலையில்இ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும். இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஒரு விளக்குவார் என்று தெரிகிறது. மேலும்இ பிரதமர் மோடி அரசின் 3வது பதவிக்காலத்தின் முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.