• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

யூனியன் வங்கியின் 107 வது தின விழா..,

BySeenu

Nov 12, 2025

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடந்த 1919 ஆம் ஆண்டு சேத் சீதாராம் பொதார் அவர்களால் நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி இன்று வரை யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தமது சேவையை தொடர்ந்து சிறப்பாக வழங்கி வருகிறது..

இந்நிலையில் யூனியன் வங்கி தனது 107 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் யூனியன் வங்கியின் 107 வது நிறுவன தின விழா இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..

முன்னதாக மும்பையில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆஷீஸ் பாண்டே தலைமையில் நடைபெற்ற விழாவில் நிதித்துறை சேவைகள் செயலர் நாகராஜூ முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில், வளரும் பாரதத்தின் தொலைநோக்கு இயக்கத்திற்கு உதவிடும் இயக்கத்தின் இந்த ஆண்டின் கருப்பொருளான ஒன்றிணைந்து ஒளிரும் எதிர்காலத்தை உருவாக்குவோம்` என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் யூனியன் வங்கியின் நிறுவன தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்ச்சியில் வங்கியின் வாடிக்கையாளர்கள்,ஊழியர்கள் அவர் தம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்..

தொடர்ந்து வங்கி ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.