
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள வல்லாளப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை வானில் நீண்ட நேரமாக அடையாளம் தெரியாத பொருள் ஒன்று நீண்ட பறந்துள்ளது. அது பார்ப்பதற்கு வட்ட வடிவமாகவும் நீண்ட நேரமாக அதிக வெளிச்சம் வெளியிட்டவாரு முன்னோக்கி பறந்து கொண்டே இருந்தது.அதிகாலையில் கடைகளுக்கு சென்றவர்கள், பால் வாங்க சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள் பலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதை பார்த்த அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர், தற்போது அது வைரலாகி வருகின்றது. திடீரென பெரிய வெளிச்சத்தோடு இந்த பொருள் வானில் பறந்து உள்ளது. காலை 6 மணிக்கு பின் இந்த வெளிச்சமான பொருளை பார்த்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
