

மதுரை தெப்பக்குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மதுரை தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத நபர் மர்மான முறையில் இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றினர்.இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? கொலையா? தற்கொலையா? போன்ற விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

