சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் APJ அப்துல்கலாம் அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தி உள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சிவகங்கை சாம்பவகா மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியினை பள்ளிச் செயலர் AM சேகர் அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

அதன் பின் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றினை மாணவர்களுக்கு எடுத்துரைத்து கண்காட்சியினை தொடங்கி வைத்தார். மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்பினை கண்காட்சி படுத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் JU.தியாகராஜன் உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் மற்றும் சரவணன் பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி சக்திவேல், ஜெயமணி, சுதிசந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

