தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நகராட்சி தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 49 கிலோ கேக் வெட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் பூலோகராஜா, ஆட்லின், இக்பால், சகாய சர்ஜினாள், ராயப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் எம்.ஹெச்.நிசார், நகர இளைஞரணி செயலாளர் சின்ன முட்டம் ஷ்யாம், நகர திமுக துணை செயலாளர் ரெஞ்சித்,

மாவட்ட மினவரணி துணை அமைப்பாளர் புஷ்பராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பி.ஆனந்த், நாஞ்சில் மைக்கேல், சகாய ஆன்றனி, பிரைட்டன், முத்துராமன், ரூபின், சார்லஸ், சிலுவை, வழக்கறிஞர் ஷேக், அந்தோணி முத்து, பாபு, பாபுலேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.








