உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான ஆண்டு பொது ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் திருமதி மலர்விழி ரஞ்சித்குமார் தலைமையிலும், செயல் அலுவலர் க. கண்ணன் முன்னிலையிலும் இன்று காலை நடைபெற்றது.விளையாட்டு
இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 8 பேர் வங்கி வரைவு ஓலை பெற்று முன்பதிவு செய்திருந்தனர். காலை 10.30 மணியளவில் ஏலம் தொடங்கிய நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே நேரில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
வங்கி வரைவு எடுத்திருந்த மற்ற ஏலதாரர்கள் பிற்பகல் 2 மணி வரை வராததால், தேவையான பங்கேற்பு இல்லாத காரணத்தால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏலத்தில் பங்கேற்ற பிரபு என்ற நபர், கடந்த பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏலம் எடுக்கவில்லை என்றும், தாம் இந்த முறை சமமாக போட்டியிட முன்வந்த நிலையில் மற்றவர்கள் வராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.விளையாட்டு
மேலும், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகும் என்றும் எச்சரித்தார்.
இந்த சம்பவம் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.






