• Mon. Mar 24th, 2025

உதயநிதி செங்கலை தூக்கிக்கொண்டு மூன்றாண்டு காலத்தை வீணடித்து விட்டார்- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

ByG.Ranjan

Mar 29, 2024

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் அது போல இப்போதே வெற்றி தெரிகிறது. மருத்துவர் சரவணன் மக்கள் பிரச்சினையை அறிந்தவர். உங்களின் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க கூடியவர்.
மதுரை அதிமுகவின் கோட்டை. எக்கு கோட்டை, எவராலும் நுழைய முடியாது.
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் இந்த ஐந்தாண்டு காலம் என்ன செய்துள்ளார். நாடாளுமன்ற வேட்பாளரை கண்டா வரச்சொல்லுங்க என நோட்டீஸ் ஓட்டினார்கள். எய்ம்ஸ் பற்றி பேசுகிறார்கள். எய்ம்ஸ் கொண்டு வந்தது அதிமுக. 38 நாடாளுமனன்ற வேட்பாளர்கள் நெஞ்சை தேய்த்து கொண்டு தான் இருந்தீர்கள். நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தால் எய்ம்ஸ் பயன்பாட்டிற்கு வந்திற்கும்‌.
2011ல் நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையை முடக்கி காவிரி பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வந்தது அதிமுக.

நீங்கள் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையை முடக்கி இருந்தால் எய்ம்ஸ் கட்டப்பட்டு இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கும்‌. உதயநிதி
செங்கலை தூக்கி திரிந்து மூன்றாண்டு காலம் வீணடித்து விட்டார். அதை பற்றி பேசினால் கொச்சை படுத்தி பேசுகிறார்.


உதயநிதி சரக்கு இல்ல அதனால் தான் என்னை பற்றி விமர்சனம் செய்கிறார்.
ஒன்னும் செய்ய முடியாதவர்களுக்கு கட்சிக்கு ஓட்டுபோட்டு என்ன பிரயோஜனம், மத்தியிலும் மாநிலத்திலும் வந்து விட்டால் கொள்ளை அடிக்கனும் என நினைக்கிறார்கள். கோ‌பேக் மோடி என்றவர்கள் வெல்கம் மோடி என்கிறார்கள். எதிர்கட்சி என்ற போது ஒரு நடிப்பு. ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நடிப்பு தமிழ் நாட்டிற்கு மோடி வரும் போது கருப்பு கொடி காட்டினால் கோபம் கொள்வார் என நினைத்து வெள்ளை குடையுடன் சென்றார்.

ஸ்டாலினுக்கு வெள்ளை கொடை ஏந்திய வேந்தன் என பெயர் வைக்கலாம். பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி என்கிறார்கள் உங்களுக்கு அந்த பழக்கம் உள்ளது. அதனால் தான் பேசி வருகிறார்கள் என விமர்சித்தார்.