சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சீத்திரணி ரோட்டில் உள்ள பிஸ்மில்லா நகரில் சிக்கந்தர் என்பவர் வீடு கட்டி வருகிறர். அவரது வீட்டின் அருகில் கடந்த மூன்று நாட்களாக ராமையா (50 சீத்துரணி)மற்றும் பாஸ்கரன் (50 திருவுடையார்புரம்) ஆகியோர் மூலம் கடந்த மூன்று நாட்களாக செப்டிக் டேங்க் அமைப்பதற்காக குழி தோண்டி வந்துள்ளனர்.

25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சென்று மேற்படி இருவரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிர் இழந்துள்ளார். இவர்களது உடல் இளையான்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
