• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விஜய் நடிப்பில் 2022ல் வெளியாகும் இரண்டு படங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜீத்குமார், விஐய் இவர்கள் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம் வெளியாகும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முன்னணி கதாநாயகர்கள் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்து வெளியிடப்பட வேண்டும் என பல வருடங்களாக கூறி வருகின்றனர்.

இவர்கள் சினிமாவில் உச்சத்தை தொடுமுன் வருடத்திற்கு இரண்டு படங்களுக்கு மேலேயே நடித்திருக்கிறார்கள் வளர்ந்தபின் தங்களது சம்பளத்தை அதிகரிக்க செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரி போன்றே நடிகர்கள் மாறி வருவதாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.


இந்த நிலையில்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய், நாயகி பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டாலும் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.


ஜனவரி முதல் வாரத்தில் அடுத்து நடிக்க இருக்கும் வம்சி படத்துக்கான போட்டோசூட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். வம்சி படம் பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீஸாக உள்ளது.