• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது..,போலீஸார் அதிரடி நடவடிக்கை…

ByK Kaliraj

Mar 20, 2025

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் தொழிலாளி சுரேஷ் வயசு 27. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்களில் குணசேகரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சுரேஷ் தொடர்பு இருந்து கைது செய்யப்பட்டார். இதை அடுத்து குணசேகரின் தம்பி மதனகோபால் 25, சுரேஷை பழிக்கு பலியாக கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் கடந்த மார்ச் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு மதன கோபால் மற்றும் அவரது நண்பர்களான சூரிய பிரகாஷ்19, தனசேகரன் 24, அருண்குமார், முத்துபாண்டி ஆகிய ஜந்து பேரும் சேர்ந்து, சுரேஷ் வீட்டிற்கு சென்று அவரை வெளியே அழைத்து கொலை செய்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக மாரனேரிபோலீஸார் வழக்கு பதிவு செய்து மதனகோபால், சூரி பிரகாஷ், தனசேகரன் கைது செய்தனர். மேலும் மூவர் கொடுத்த வாக்கு மூல அடிப்படையில் போலீசார், மேலும் இருவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த திருத்தங்கல் சரஸ்வதி நகர் முத்துப்பாண்டி 24, ஆலாவூரணி அருண்குமார் 27 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.