• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தங்கநகைகள் அடங்கிய பையை பறிக்க முயன்ற இருவர் கைது..!

ByKalamegam Viswanathan

Jan 11, 2024

மதுரை நகைக்கடை பஜாருக்கு சென்னையில் இருந்து கொண்டு வந்த தங்க நகைகள் அடங்கிய பையை பறிக்க முயற்சிக்கும் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பிடித்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே உள்ள நகை கடை பஜாருக்கு ஆர்டரின் பேரில் தங்க நகைகளை டெலிவரி செய்ய சென்னையை சேர்ந்த சீனி முகமதுஆரீப் லெட்சுமணன் ஆகிய இருவரும் நகைகளை கடந்த 6ம் தேதி கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த நகைகள் அடங்கிய பையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பறித்து சென்றனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன.
இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், வெள்ளி கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் அடங்கிய பையை மட்டுமே மர்ம நபர்கள் பறித்து சென்றனர். தங்க நகைகள் அடங்கிய பையை இறுக்கமாக பிடித்து கொண்டு கத்தியதால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாகவும். விசாரணையின் போது தெரிவித்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணையை துவக்கினர் அதோடு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த யாசர் அராபத் மற்றும் பெருங்குடி அடுத்த வலைய பட்டியை சேர்ந்த ரஹீம் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மேலும் சிலரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் லோகநாதன் லோகநாதன் பாராட்டினார்.