உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தலைவர் (தவெக) தனது சமூக வலைதளப்பக்கத்தில் “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.