• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலைகளுக்கு மேலே தாமரை மலரும் டிடிவி தினகரன் பேட்டி..,

ByVasanth Siddharthan

Apr 22, 2025

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாண்டி ஆளுநர் நடக்க முடியாது. நடக்க மாட்டார். ஆளுநர் கூட்டம் கூட்டியுள்ளனர். ஆனால், தீர்ப்பிற்கு எதிரா என்று தெரியவில்லை. சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசனை செய்து தான் பதில் கூற முடியும்

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் அமமுக கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 22.04.25 மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

முன்னதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். தமிழ்நாடு மக்கள் துணையோடு மாபெரும் வெற்றி பெறுவோம். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே உள்ளோம் தேர்தலை சந்தித்துள்ளோம்

அமமுக கட்சி தொடங்கி 8 வருடங்கள் ஆகிறது. அடுத்த தலைமுறைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கொண்டு சென்று வருகிறோம்.

அதிமுகவுடன் அமமுக இணையும் என்ற யுகத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு – தேர்தல் வரும் பொழுது கூட்டணி என்பது தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியா முழுவதும் மாற்றி அமைத்துக் கொள்வது தான். திமுக ஆட்சியை கலைத்தது காங்கிரஸ்தான். தற்போது அவர்களுடன் தான் திமுக கூட்டணியில் உள்ளது.

திமுக என்ற தீய சக்தியை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் அதனால் ஒற்றைக் கருத்துள்ள கட்சிகளை இணைக்கிறோம்.

திமுக ஆட்சியில் எதுவும் சரியாக நடைபெறவில்லை. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு கூட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை தற்போது அவர்கள் கைது செய்துள்ளனர். மக்கள் விரோத ஆட்சியில் எதுவும் சரியாக நடைபெறவில்லை.

திமுக ஆட்சியில் எது சரியா நடக்கிறது என்று நம்புகிறீர்கள்

நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் அகற்றி விடுவோம் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூறினார்கள். ஆனால், தற்போது அவர்களது கையெழுத்தை மறந்து விட்டார்கள் அதனால் தான் போடவில்லை. மக்களை ஏமாற்றியதற்கு 2026ல் மக்கள் அவர்களுக்கு சரியான பதில் அளிப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். அவர் முன்னணி நடிகர் என்பதால் கட்சி ஆரம்பித்து உள்ளார்.

ஆளுநர், துணை வேந்தர்களுடன் நடத்த உள்ள கூட்டம் குறித்த கேள்விக்கு – உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாண்டி ஆளுநர் நடக்க முடியாது. நடக்க மாட்டார். ஆளுநர் கூட்டம் கூட்டி யுள்ளார் ஆனால், தீர்ப்பிற்கு எதிரா என்பது தெரியவில்லை. சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசனை செய்து தான் பதில் அளிக்க முடியும்.

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் இலக்கு மேல் தாமரை மலரும் எனக் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு

இலைகளுக்கு மேலே தாமரை மலரும் ஆனால் இலையை அழுத்துவது இல்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா குறித்து உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்ட கேள்விக்கு

வக்பு வாரிய சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வரட்டும்.

விவசாயம் உட்பட அனைத்து தொழில்களுமே இந்த ஆட்சியில் பாதிப்பு அடைந்துள்ளது. ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் விடிவு வரும் என தெரிவித்தார்.