• Sun. May 12th, 2024

குமரி மீனவர்களின் மனதில் அழியாத சுனாமி ஓக்கி வடுகள்

இன்றிலிருந்து சரியாக 19_ஆண்டுகளுக்கு முன் 2004_ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 47_மீனவ கிராமங்கள் விழா மகிழ்ச்சியில் இருந்த போது காலை 9.30 மணி அளவில் அதுவரை யாரும் கண்டிராத கடலின் நற்தனமாடியது மீனவர்களின் தாயான நீலக்கடல்.

கடலிருந்து அலை கூட்டங்கள் தென்னை மரத்தின் அளவுக்கு வெண் அலைக் கூட்டம் ஆர்பரித்து வந்து, கன்னியாகுமரி, ஆரேக்கியபுரம், மேலமணக்குடி, கொட்டில் நாடு
குளச்சல் ஆகிய மீனவ கிராமங்களில் சுனாமி ஆழிப்பேரலை சில நிமிடங்கள் சண்டமருதம் செய்த பின், மீண்டும் கடலுக்குள் திரும்பி விட்டது. ஆனால் ஆழிப்பேரலை புகுந்த பகுதிகளில் இது வரை இருந்த காட்சிகள் மாறியது.

கடற்கரை பகுதியில் இடிந்த வீடுகள், தூக்கி வீசப்பட்ட தூண்டில் பாலத்தின் பெரிய, பெரிய கற்கள், சின்ன மணக்குடி, பெரிய மணக்குடி இணைப்பு பாலம், சிதரடிக்கப்பட்ட கட்டுமரங்கள், வள்ளங்கள், கடலில் கட்டப்பட்டிருந்த விசைபடகுகள், சுனாமி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வெளியே வந்தபின், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், மகனை, மகளை, தாயை, தந்தையை இழந்தவர்கள் என ஒரு பெரும் கூட்டம் உறவுகளை இழந்ததை கடந்து சிலர் யாரும் அற்ற அனாதையாக, 2004_ம் ஆண்டு சுனாமி சதுராட்டம் ஆடிய அந்த நாளில் குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுசீந்திரம் தேரோட்டமும் நடந்தது. இடையில் 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. சரியாக 19 ஆண்டுகளுக்கு பின் இன்று சுனாமி நினைவு தினத்தில் சுசீந்திரம் தேரோட்டம் இன்று நடை பெறுகிறது.

சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலில் குமரியில் மீனவ சமுகத்தினர் குமரி முக்கடல் சங்கமத்தில் நீராடிய சுற்றுலா பயணிகள் என சுனாமியால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 800_க்கும் அதிகம்.

குளச்சல் பகுதியில் மரணம் அடைந்தவர்கள் 400_க்கும் அதிகம். குளச்சல் மீனவ கிராமத்தில் மரணம் அடைந்த 3-வயது குழந்தை உட்பட அகவை 80_கடந்த ஆண்,பெண்களின் சடலம் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு, குளச்சல் காணிக்கை மாதா தேவாலயம் முற்றத்தில் ஒரே குழியில்.அன்றைய குமரிமறை மாவட்ட ஆயர் தர்மராஜ்யின் பிரார்த்தனைக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.அந்த நேரத்தில் நேரத்தில் தாங்க முடியாமல் சோகத்தில் எழுந்த அழு குரல் பெரும் கடலின் அலையை ஓசையையும் பின்னுக்கு தள்ளி விட்டது.

கொட்டில் பாட்டில் மரணம் அடைந்தவர்கள் 199_பேர், மேலமணக்குடியில் மரணம் அடைந்தவர்கள் 118பேர். இன்று கொட்டில்பாட்டில் நடந்த நினைவேந்தல் நிகழ்வுகள். ஊர்வலம் கல்லறையில் மலர் தூவி, மெழுகு திரி ஏற்றி வைத்து மறைந்து போன உறவுகளின் நினைவை போற்றினார்கள்.

சுனாமி ஆழிப்பேரலை வந்து போன பின் ஓக்கி புயல் வந்து கடலில் நடத்திய தாக்குதலில் மீனவர்கள் கடலில் பிணமாக பல நாட்கள் மிதந்த உடல்களை மீட்க கடலோர காவல்படை காலம் தாழ்த்திய நிலையில் பலர் மீனுக்கு இறையானர்கள் என்பதும் மீனவ சமுகம் மனதில் இன்றும் சுமக்கும் இரண்டு வேதனைகள்.

கடல் அலை நின்றபின் நீராடலாம் என்பது எப்படி முடியாதோ, அதை போல் சுனாமி, ஓக்கி புயல் ஏற்படுத்திய வடுக்கள் குமரி மீனவ சமுகத்தின் மற்றொரு அடையாளமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *