• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிரம்பின் இனி டுவிட்டரை பயன்படுத்தலாம் – எலான் மஸ்க்

ByA.Tamilselvan

May 11, 2022

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் டிராம்ப். கடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக்கூறி இருந்தார். இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் டுவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது. தற்போது டுவிட்டரை வாங்கியுள்ளார் எலான்மஸ்க் .அவர் டிரம்ப் இனி டுவிட்டரை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மேலும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.