• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

உண்மை சம்பவ கிரைம் திரில்லர் திரைப்படம் – தி ஜ 3..,

Byஜெ.துரை

Feb 21, 2026

ஒரு மலைக்கிராமத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம் பெண்கள், காதலர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

போலீஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இச்சூழ்நிலையில் தொழிலதிபர் ராகவன் மீது போலீசுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் மாற்று வழியை கையாளுகின்றனர்.

அது என்ன வழி ?கொலையாளிகள் யார் ? என்று பல கோணங்களில் துப்பு துலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படும் படமே தி ஐ -3,

ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ் சார்பில் கொடைக்கானல்
ஆர்.ராஜேந்திரன் தயாரிக்க குரு பிரகாஷ் இயக்கி உள்ளார்.

ரோஷன் – சந்தியா கதாநாயகன் நாயகியாக நடிக்க ரமேஷ்,மாலி,சுஜி ,ஸ்ரீ, சாய் கோபி,லோகேஷ் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜேஷ் குமார் இசை -ஜீவா வர்ஷினி பாடல்கள் -காதல் மதி எடிட்டிங் –
சி.எஸ் பிரேம்குமார் நடனம் – விமல் சண்டைப்பயிற்சி – ரவி ராஜ்

மக்கள் தொடர்பு -வெங்கட் வசனம் -முத்துக்குமார் இணைத்தயாரிப்பு – செல்வ சத்யா, ரஞ்சிதா கதை திரைக்கதை இயக்கம் -குரு பிரகாஷ்.

இதன் படப்பிடிப்பு தேனி மாவட்டம் மேகமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், சின்னமனூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 45 நாட்களாக இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

பாபிலோனா தொடாத பருவத்தோட்டம் …எனும் துள்ளல் இசை பாடலும்
உனக்குள் நான் தொலைந்து போனேன் … எனும் மென்மையான காதல் பாடலும் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் முதல் முதலாக யாரும் சென்றிடாத இடமான தேனி மாவட்டத்திலுள்ள மேகமலையில் முழு நீள சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்தின் அனைத்து தொழில் நுட்ப வேலைகளும் முடிவடைந்த நிலையில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.