நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதன்படி வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்து நாகை அவுரி திடலில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசுக்கு எதிராகவும், சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.