விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.

இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு எடை போடும் இயந்திரம் மற்றும் இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட துணை தலைவர் டாக்டர் யமுனா தலைமை தாங்கினார். முன்னாள் நகர தலைவர் ஜமீர் கழக நிர்வாகி சிவக்குமார் முன்னிலையில் பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் கட்சித் தொண்டர்கள் ஏ. ஆர். ரவி பாலாஜி .. தீவான். சரவணன் மற்றும் பாலாஜி ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு காந்த சிலை ரவுன்டானவில் இனிப்பு வழங்கி விஜய் பிறந்தநாளை கொண்டாடினர்.