• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராணுவ வீரர் சரண் உடலுக்கு அஞ்சலி ..,

ByK Kaliraj

Aug 26, 2025

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துச்சாமிபுரம் ராணுவ வீரர் சரண் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்திற்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு கொண்டுவரப்பட்டது.

இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி பவித்ரா( 24) என்ற மனைவியும் 11 மாத பெண் குழந்தை உள்ளனர் .ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் 54. ஆர்.ஆர். பிரிவில் பணிபுரிந்து வந்தார். நடைபெற்ற ஆபரேஷன் சிந்துரிலும் பணிபுரிந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி பணியில் இருந்த போது சரணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். .

தேசியக் கொடியை சரண் குடும்பத்தினரிடம் ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர்.பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள் , முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.