மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர தந்தையும் அஇஅதிமுகவின் சோழவந்தான் தொகுதி முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவரும் விவசாய சங்க தலைவருமான எஸ்எஸ் சோனை பிள்ளையின் 39 ஆவது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் தெற்கு தெருவில் வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் மலர் தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி பி ராஜா வாடிப்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்புளியங்குளம் ராமகிருஷ்ணன் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் விவசாய அணி வாவிட மருதூர் ஆர் பி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் மற்றும் தெற்கு தெரு சிவா ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கப்பாண்டி ராஜேந்திரன் மருத்துவர் அணி பாலகிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் கருப்பட்டி கருப்பையா பேரூர் துணைச் செயலாளர் தியாகு துரைக்கண்ணன் ஜெயபிரகாஷ் மகளிர் அணி சாந்தி மாரிமுத்து முன்னாள் கவுன்சிலர் தண்டபாணி பத்தாவது வார்டு மணிகண்டன் குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன் விக்னேஷ் சிவராஜ் சங்கங்கோட்டை ஆறுமுகம் தென்கரை நாகமணி மன்னாடிமங்கலம் முன்னாள் தலைவர் ரங்கநாதன் பிரேம் புதுப்பட்டி கிளை செயலாளர் பாண்டுரங்கன் ஆனந்தம் மஹால் கண்ணன் வேளார் தெரு தன்ராஜ் அய்யவார்தெரு குணா நாகு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.




