• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துரைராஜ் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..,

ByP.Thangapandi

Jan 5, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ அய்யப்பன்., தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு.,

அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை ஒன்றிணைக்க வேண்டும், 2026 ல் அம்மாவின் கனவு நிறைவேற வேண்டும் என ஒபிஎஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், நானும் ஒபிஎஸ் தலைமையை ஏற்று அரசியல் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.,

அதிமுகவை ஆட்சி கட்டில் அமர்த்த வேண்டுமென்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேலையில் ஒபிஎஸ் அவர்களுக்கு கரம் கொடுப்பது தான் என்னுடைய பணி.,

நான் எந்த காலத்திலும் எக்காரணம் கொண்டும் தவெகவில் இணைய மாட்டேன், அந்த சிந்தனையும் இல்லை., ஏனென்றால் உசிலம்பட்டி வீரம் நிறைந்த மண் அந்த மக்களின் நம்பிக்கையை பெற்றவன் நான்., என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாமல் ஒபிஎஸ் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்., அந்த பயணம் நல்ல பயணமாக அமையும் என தெரிவித்துக் கொள்கிறேன்.,

தவெகவில் இணைய போகிறேன் என எப்படி இந்த பொய்யான தகவல் பரப்ப பட்டது என தெரியாது., நான் தவெகவில் இணைய போகிறேன் என யாரிடமும் சொல்லவில்லை, தவெகவிலிருந்து என்னிடமும் யாரும் பேசவில்லை., என்னுடைய பயணம் ஒபிஎஸ் வழியில் தான் என்பதை ஆனித்தனமாக கூறிக் கொள்ள கடமை பட்டுள்ளேன்., என பேட்டியளித்தார்.,