• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக பிரமுகர்- துரைமுருகன் அஞ்சலி

பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த திமுக பிரமுகர் உடலுக்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பி.கே.புரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக பேனர் கட்டும் பணியில், வடுகந்தாங்கல் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மார்கபந்து ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவரது உடலுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், எம்.பி.கதிர் ஆனந்த் ஆகியோர், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.