• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தன்னார்வ அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா..,

BySubeshchandrabose

Dec 20, 2025

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் (Green Tamil Nadu Mission) திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஆரோக்கியமான மனித வாழ்விற்கு மரங்கள் இன்றியமையாததாக உள்ளது.

குறிப்பாக, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள அதிக மரங்களை நடுவது ஒரு முக்கியமான வழியாக உள்ளது.

அதனடிப்படையில். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் பசுமைப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை 24.09.2022 அன்று தொடங்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ், பல்வேறு அரசுத்துறைகள் பொது, தனியார் அமைப்புகள் மற்றும் மக்கள் பங்களிப்புடன் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அரசு நிர்வாகம், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து பசுமையான எதிர்காலத்திற்காக மேற்கொள்ளும் இந்த மரக்கன்று நடும் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். இம்முயற்சி மாவட்டத்தின் பசுமை பரப்பளவை அதிகரிப்பதுடன், காலநிலை எதிர்கொள்வதற்கான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டையும்,

அதனடிப்படையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார். உதவி வனப் பாதுக்காவலர் செசில் கில்பர்ட், உதவி திட்ட அலுவலர் ஜான் கென்னடி, கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) மற்றும் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் (ExNoRa International Foundation) ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து வனச்சரக அலுவலர்கள், பசுமை தோழர் அஃய்ஷானா, வனப்பணியாளர்கள் உட்பட கலந்து கொண்டனர்.