பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் தலைமையில் 100 மரக்கன்றுகள் நடும் விழா கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கருப்பசாமி மற்றும் துணை தலைவர் சங்கரப்பன் மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
