• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்தோ – திபத் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா.., 349 வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு..!

ByG.Suresh

Nov 2, 2023

சிவகங்கை அருகே உள்ள இந்தோ தீபத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையத்தில் சிப்பாய்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இங்கு 44 வாரங்களில் கால ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மலை ஏறுதல், நீச்சல் பயிற்சி, யோகா, தற்காப்பு பயிற்சி, பல்வேறு உடன் திறன் பயிற்சி உள்ளிட்ட கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் இந்திய எல்லையில், பல்லாயிர அடி உயரமுள்ள மலை உச்சியில் கடுமையான பனி மற்றும் வெய்யிலில் தங்களை வருத்திக்கொண்டு தன்னுயிரை கொடுத்து இந்திய மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். 481 முதல் 485 படை பிரிவை சேர்ந்த 349 வீரர்கள் தங்களின் பயிற்சியினை இன்று நிறைவு செய்ததை முன்னிட்டு வீரர்களின் பயற்சி நிறைவு விழா ஐ.ஜி அசோக் குமார் மற்றும் டி.ஐ.ஜி .அக்சல் சர்மா முன்னிலையில் நடைபெற்றது.

தேசிய கொடி முன்னர் தாய்நாட்டிற்காக தங்களின் இன்னுயிரை தந்து நாட்டை காப்பதாக உறுதிமொழியை வீரர்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஐஜி. அசோக் குமார் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 7 வீரர்களுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். வீரர்கள் கராத்தே சிலம்பம் உள்ளிட்டபல்வேறு வீர சாகசங்களை நிகழ்த்தி காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியாக பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் தங்கள் உறவினர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.