• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து

ByKalamegam Viswanathan

Oct 31, 2024

சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று புறப்பட்ட சென்னை போடி விரைவு ரயில் ஆனது இன்று காலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தது. பின் போடி கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அப்பொழுது இன்ஜினுக்கு அடுத்த மாற்றுத்திறனாளி பெட்டி உள்ள சக்கரம் திடீரென கலன்று விபத்துக்குள்ளானது. ரயில் புறப்பட்ட சிறு தூரத்திலேயே சக்கரமானது கலன்று விபத்துக்குள்ளானது. ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு தரம் புரண்ட ரயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தி முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நல்வாய்ப்பாக ரயில் புறப்பட்ட சில வினாடிகளில் சக்கரமானது பழுது ஏற்பட்டு தடம் புரண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.