பாதசாரிகள் மற்றும் பேருந்து பயணிகள் பேருந்தில் இருந்து ஏறி இறங்கும் பொழுது சாலையை எவ்வாறு கடக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேற்கொண்டார்.

மதுரையில் இன்று காலை கீழவாசல் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய மூதாட்டி ஓட்டுநர் கண்களுக்கு தெரியாத அளவிற்கு தேடுதலை ஒட்டி சாலையைக் கடந்ததால் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் இதனை தொடர்ந்து மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் காவலர்கள் மதுரை ரயில் நிலையத்தில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பேருந்தில் ஏறி இறங்கிய பின் சாலையை எவ்வாறு கடக்க வேண்டும் மற்றும் பாதசாரிகள் சாலையை எவ்வாறு கடக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு துண்டு பிரசுரங்களும் வழங்கினர்.
பேருந்து ஓட்டுநர் முன் பகுதியில் ஒட்டி கண்ணுக்கு புலப்படாத அளவிற்கு சாலையை கடந்தால் விபத்தில் சிக்கி உயிரிழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் பேருந்து கடந்த மற்றும் கனரக வாகனங்கள் நின்றால் அதை கடந்த பிறகு சாலையை கடக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். இது பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்படும் என பொதுமக்கள் கூறுகையில் காவலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது. மிகுந்த வரவேற்பு பெற்றது மேலும் எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இருந்த பயனுள்ளதாக இருந்தது எனவும் காவலர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்













; ?>)
; ?>)
; ?>)