கோவை, காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் பழைய மின் கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சில மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அதற்குப் பிறகு அவற்றை தற்காலிகமாக சீரமைத்து இருந்த போதிலும், இன்று மீண்டும் சரக்கு வாகனம் மோதி அந்த பழைய மின் கம்பங்களில் ஒன்று சாலையின் நடுவே முற்றிலும் சாய்ந்து விழுந்து உள்ளது.

சித்தாபுதூர் அருகே காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் விழுந்த மின் கம்பம் போக்குவரத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து காவல் துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதேசமயம் மின் வாரியத்தினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து மின் கம்பத்தை பாதுகாப்பாக அகற்றி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, ஆபத்தான இடத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மின் கம்பம் அகற்றப்படும் வரை அந்த பகுதியில் போக்குவரத்து சீராக நடைபெறாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையிலும், சித்தாபுதூர் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.