• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போதிய மழை இல்லாதால் மாங்காய் வரத்து குறைவால் வியாபாரிகள் வேதனை

BySeenu

Apr 23, 2024

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து குறைவாக வருவதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தினால் மாங்காயின் வரத்து குறைந்த அளவிற்கு மார்கெட்டிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் வரத்து குறைவால் மாங்காயின் விலை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகவில் இருந்து வரக்கடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவையில் இருந்து இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவையில் நிர்ணயிக்கபட்ட விலை தான் இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக கோவை வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் மாங்காய் வந்து கொண்டு இருப்பதாகவும் தருமபுரியில் மாங்காய்கள் வர தொடங்கியுள்ளது என்றும் இன்னும் 3 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு மழை பொழிவு குறைவாக இருந்ததால் மாங்காய் வரத்து குறைந்தளவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது என்றும் மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று கூறினார். மேலும் தற்போது மார்கெட்டில் மொத்தமாக 60 லட்சம் முதல் 80 லட்சம் வரை விற்பனையாகி வருவதாக பழ மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.

பேட்டி:-
ஜவகர்
பழ மண்டி வியாபாரிகள் சங்கம்