• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் மகிழ்ச்சி..,

ByVasanth Siddharthan

Jun 1, 2025

நாடு முழுவதும் வருகின்ற 7 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் சமைப்பதற்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு வழங்குவதற்காகவும் ஆடுகளை அதிகளவில் வாங்குவார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஆட்டுச் சந்தைகளில் நத்தம் பகுதியில் நடைபெறும் ஆட்டுச்சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இந்த சந்தையில் திண்டுக்கல் மதுரை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நத்தம் சாணார்பட்டி கோபால்பட்டி செந்துறை கொட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை நத்தம் ஆட்டுச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தது. இதில் ஆடுகளின் எடைகளுக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.

வழக்கத்தை விட பக்ரீத் பண்டிகை என்பதால் வேறு ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிக அளவில் விற்பனையானதால் ஆடு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.