• Sat. Apr 27th, 2024

குற்றாலம் அருவிகளில்குவியும் சுற்றுலா பயணிகள்

ByA.Tamilselvan

Apr 25, 2022

குற்றால சீசன் என்பது ஜூன் மாத வாக்கில் தொடங்கும். சரியாகசொன்னால் தென்மேற்கு பருவமழை கேரள பகுதியில் துவங்கும் போது சீசன் துவங்கும் . 2 ஆண்டுகள் கொரோனா கட்டுபாடுகளுக்கு பிறகு குளிக்கஅனுமதி கிடைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாடகளாக நெல்லை, தென்காசி மாவட் டத்தையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்ச மாக அம்பாசமுத்திரத்தில் 28.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 21 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.இதேபோல் சேரன்மகாதேவி, பாப நாசம் உள்ளிட்ட இடங்களிலும், தென் காசி மாவட்டத்திலும் மழை பதிவா னது. மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் ஏரா ளமான சுற்றுலா பயணிகள் குற்றா லத்திற்கு படையெடுத்து வருகி றார்கள். நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான இயல்பான சராசரி மழை அளவு 814.80 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் 20-ந் தேதி வரை 185.2 மில்லிமீட்டர் மழை பெய்துள் ளது. இந்த மாதத்திற்கான மழை அளவை கணக்கிடும் போது இயல் பான மழையை விட 2.32 சதவீதம் அதிகளவு மழை பெய்துள்ளது. விடு முறை தினமான ஞாயிற்றுக்கழமை காலை முதலே மெயினருவி, ஐந்த ருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஏராளமா னவர்கள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்தனர். கொரோனா குறைந்ததால் தற்போது குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பய ணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இரவில் குளிக்கும் வகை யில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், குற்றாலம் பேரூராட்சி அதிகாரியும் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மெயின ருவி, ஐந்தருவி பகுதியில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் திங்கட்கிழமை முதல் இரவிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனு மதி வழங்கி உள்ளது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியிலும் இரவில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், வணிர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *