• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உதகை சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்

உதகை தொட்டபெட்டா சிகரத்தில் சூசைட் பாயிண்ட் பகுதிக்கு உரிய பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்
நீலகிரி மாவட்டத்தி உள்ள தொட்டபெட்டா சிகரம் மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து சாமுண்டி மலை பார்க்க முடியும். மேலும் உதகை நகரம், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளையும் காண முடியும்.இந்த சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அழகிய இயற்கை காட்சிகளையும், தொலைநோக்கி மூலம் பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கோவையை சேர்ந்த 62 வயதுடைய லீலாவதி ஒரு மூதாட்டி தடுப்பு வேலிகளைத் தாண்டி 500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


இதனை அடுத்து தொட்டபெட்டா சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை சூசைட் பாயிண்ட் பகுதிக்கு அனுமதிக்காமல் பாதையை தொட்டபெட்டா நிர்வாகம் அடைத்துள்ளது.இதனால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மட்டுமே இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் உரிய பாதுகாப்புகளுடன் சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்டததுறை நிர்வாகத்திற்க்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.