• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ByG. Anbalagan

Apr 27, 2025

தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை ஒட்டி, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் மற்றும் இன்றி வெளி மாவட்ட, வெளி மாநில  இந்தியாவில் பல்வேறு பகுதியில் இருந்து இங்கு நிலவும், இதமான கால நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம். அதை போல் இங்குள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைக்கார நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, படகு இல்லம், சிம்ஸ் பூங்க , பைன் பாரஸ்ட் , கோடநாடு காட்சி முனை போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்

இந்நிலையில் சமவெளி பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாளான இன்று உலக பிரசித்தி பெற்ற  அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

இப்பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம், பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் வானுயர்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களை  கண்டு ரசித்தும், இதமான காலநிலையை அனுபவித்து வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப, குடும்பமாய் புகைப்படம் மற்றும் செஃல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.