திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம், அண்ணா சாலை, கான்வென்ட் ரோடு அப்சர்வெட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ஏரிசாலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் நனைந்தபடியும் , குடைகளை பிடித்தபடியே நட்சத்திர ஏரியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து சாரல் மழை மற்றும் பனி மூட்டம் நிலவுவதால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.








