• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆப்பிள் விலையை தொட்ட தக்காளி…அடேங்கப்பா..!

Byகாயத்ரி

Nov 24, 2021

கோவையில் ஆப்பிள், தக்காளி இரண்டும் ஒரே விலைக்கு விற்கப்படுகிறது.
பருவமழை காரணமாக தமிழகத்தில் தக்காளியின் விலை விண்ணை தொட்டுள்ளது. ஒரு ரூபாய்க்கு கூட தக்காளி விற்கப்பட்ட காலமும் உண்டு. தக்காளி விலை போகாமல் நீர் நிலைகளில் கொட்டப்பட்ட காலமும் இருக்கிறது.


ஆனால் தற்போது ஒரு தக்காளி 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் கோவையில் ஆப்பிள், தக்காளி இரண்டும் ஒரே விலை.கோவை சந்தைக்கு கோலார், ஓசூரிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கனமழையாலும், ஒரு கிலோ 110 முதல் 130 வரை விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 140 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது.


தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு காய்கறி பழ விற்பனை அங்காடியில் ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விலை அதிகரிப்பால், வழக்கமாக ஒரு கிலோ வாங்குபவர்கள் கூட கால் கிலோ என்ற அளவில் வாங்கிச்செல்கின்றனர்.இந்நிலையில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் 85 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.