டாய்லெட் பற்றி பேச பலரும் தயங்குவது வழக்கம். இந்நிலையில், மக்கள் நலனுக்காக துணிந்து தனது கருத்தை வீடியோவாக முன் வைத்த கிருத்திகா உதயநிதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன! சுகாதாரம் என்பது அனைவருக்கும் எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் கிருத்திகா!
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி,தான் பதிவிட்ட வீடியோவில், தனக்கு டாய்லெட் கிடைக்காமல் போன அனுபவங்களையும் ஷேர் செய்துள்ளார்
இந்த அவல நிலையை மாற்றும் முனைப்பாக மேப்பதான் எனும் நிகழ்வு ஏப்ரல் 2 மற்றும் 3ம் தேதி சென்னை சாந்தோம் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. சென்னை கார்ப்பரேஷன், ரீசைக்கிள் பின் உள்ளிட்டவைகள் இணைந்து நடத்தக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மீண்டும் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளாக மாற்ற இந்த முயற்சி உதவும் எனக் கூறியுள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)