• Fri. Apr 26th, 2024

கழிவறை இருக்கை -நூல் விமர்சனம்.

ByA.Tamilselvan

Sep 3, 2022

எழுத்தாளர் லதா அவர்களின் ஆங்கில கட்டுரை தொகுப்பு தமிழில் கழிவறை இருக்கை தலைப்பில் 32 அத்தியாயம் 241 பக்கங்கள் நவம்பர் 2020 வெளிவந்துள்ள இந்த புத்தகம் யாரும் சொல்லாத வெளியில் பேச, கூசும், அஞ்சும், காமம், கலவிக் குறித்து பேசியிருக்கிறது.
இக்கட்டுரை தொகுப்பிற்கு முனைவர் தமிழ்மணவாளன் கவிஞர் எழுத்தாளர் முன்னுரை வழங்கியிருக்கிறார். அதேபோல பேராசிரியர் முனைவர் நளினிதேவி பெண்ணிய பார்வையில் இந்நூல் குறித்து கருத்துக்களை ஆழமாக பதிவு செய்துள்ளார்.
“முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடியும்” தாம்பத்யம் எத்தனைப் பேருக்கு வாய்த்திருக்கிறது. அ வெண்ணிலா அவர்களின் கவிதையின் விரிவாக்கம் தான் இக்கட்டுரை தொகுப்பு. நிறைய்ய தரவுகளோடு, மிக நுட்பமாக ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார் கட்டுரையாளர். எதிர் விளைவுகள், எதுவாயினும், சந்திக்கும் சாவலோடு புத்தகமாக கொண்டு வந்திருக்கும் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் நமது குடும்பம், சமுகம், ஊடகம் இவையெல்லாம் பெண்ணை காமம் குறித்த விஷயத்தில் அப்ரானியாக இருக்கவே விரும்புகிறது. “புரியாத புதிர்” திரைப்படத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடும் ரகுவரன் தன் மனைவியின் எதிர்பார்ப்பை சந்தேகிப்பான். கலவி என்பது இங்கே ஒரு வழிப் பயணமாக சொத்துடமை சமூகத்தில் அரங்கேறிவருவதையும் பெண் உடல் ஆணுக்கு கழிவறை இருக்கை என்பதை (எ.கா) விவரித்துள்ளார்.
காதல் காமத்தின் துருப்பு சீட்டு
காமம் கொன்று காதல் வளர்க்க முடியாது, காதலின்றி காமம் மட்டுமே வாழ்க்கையாகது . ஆக இன்றைக்கு அன்றாடம் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள், வெளி மண உறவு சிறுமிகளுக்கு நடக்கும் வன்முறை இவை போன்ற சீர் கேடுகளுக்கு எது மூலக்காரணம்?! இந்நூல் அதுப் பற்றி பேசுகிறது.., விவாதிக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டாலும் ,பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணமானாலும் , குடும்ப உறவில் பெண்களின் சந்தோஷம் ?????? பெண்களுக்கு ஏற்படும் இந்த ஏமாற்றம் எதனால் விரிவாக விளக்குகிறது இந்நூல்.
க.பாண்டிச்செல்வி

============

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *