• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இன்று விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் (மார்ச் 17, 1962).

ByKalamegam Viswanathan

Mar 17, 2025

கல்பனா சாவ்லா (Kalpana Chawla) மார்ச் 17, 1962ல் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர். கல்பனா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது. 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87)ல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். 1984ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். STS-87ன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக் கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.

STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர். முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002ம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர். 1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது. மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள், அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor), நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம் (NASA Space Flight Medal), நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal). கல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது. பாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் ‘கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ‘ என்று நிறுவியுள்ளது.

ஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும். இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர். மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்குக் கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla way) எனும் தெருவும் உள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது. குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது. நாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதி நவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது. இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறது. இதழ் மற்றும் புதினத்தில் ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா – கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று. நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக், தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.

விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா பிப்ரவரி 1, 2003ல் தனது 40வது அகவையில் விண்கலம் வெடித்துச் விண்ணில் கலந்துள்ளார். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.