• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த, ஜெர்மனி வானியற்பியலாளர்- எர்மன் கார்ல் வோகல் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 3,1841).

ByKalamegam Viswanathan

Apr 3, 2023

எர்மன் கார்ல் வோகல் (Hermann Carl Vogel) ஏப்ரல் 3,1841ல் சாக்சானிப் பேர்ரசின் இலீப்சிகுவில் பிறந்தார். இவர் தந்தையார் ஒன்றிய பூர்கர்சுகூலனாக இருந்தவர். இவர் தான் இலீப்சிகுவில் முதல் பள்ளியை நிறுவியவர் ஆவார். இவர் பெற்றெடுத்த மக்களில் ஆப்பிரிக்காவின் ஆய்வாளரும் வானியலாளரும் ஆகிய எடுவார்டு வோகல், கவிஞரும் பாடகரும் ஆகிய எஇல்சே போல்கோ, எழுத்தாலரும் வெளியீட்டாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆகிய ஜூலி டோம்கே அடங்குவர். 1862ல் வோகல் தன் படிப்பை டிரெசுடன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். 1863ல் இலீப்சிகு பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அங்கு இவர் கார்ல் கிறித்தியான் புரூகின்சிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது இவர் பிரீடுரிக் வில்கெல்ம் உருடோல்ஃப் எங்கல்மன் மேற்கொண்ட இரட்டை விண்மீன்களின் அளவீடுகளில் பங்கேற்றார்.

வோகல் ஜேனாவில் தன் முனைவர் பட்டத்தை ஒண்முகில்கல், விண்மீன் கொத்துகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்காக பெற்றார். அதே ஆண்டில் சுட்டென்வார்த்தே போத்காம்புக்குச் சென்றார். இது கீல் நகருக்கு 20 கி.மீ தெற்கில் இருந்த காமர்கெர்னில் அமைந்துள்ளது. இங்கே இவர் முதன்முதலாக, வான்பொருள்களின் கதிர்நிரல் பகுப்பாய்வை மேற்கொண்டார். அப்போது இவருக்கு வில்கெல்ம் ஆசுவால்டு உலோக்சே உதவியாளர் ஆனார். 1874ல் போட்சுடாமில் நிறுவப்பட்ட வானியற்பியல் வான்காணகத்தின் பணியாளராக இந்த வான்காணகத்தை விட்டு வெளியேறினார். அங்கு இவர் அந்நிறுவனத்தின் கருவிகளின் திட்டமிடலிலும் அமைப்பதிலும் ஈடுபட்டார். இதற்காக இவர் பிரித்தானியாவுக்கு 1875 கோடையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

வோகல் 1882 முதல் 1907 வரை போட்சுடாம் வானியற்பியல் வான்காணகத்தில் இயக்குந்ராக இருந்தபோது அந்நிறுவனத்தை வானியர்பியலுக்கான உலக முன்னிலை நிறுவனமாக மாற்றினார். விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்து பரவலான கண்டுபிடிப்புகல் செய்துள்ளார். பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் வால்சு பரிசு, அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் என்றி டிரேப்பர் பதக்கம், சாதனைக்கான இலாந்துசுகுரோனர் பதக்கம், இரிச்சர்டு சி. வைட் பர்ப்புள் தகைமைப் பதக்கம், புரூசு பதக்கம் ஆகிய பதக்கங்களைப் பெற்றார். நிலாவில் உள்ள குழிப்பள்ளம், செவ்வாயில் உள்ள குழிப்பள்ளம், குறுங்கோள் 11762 ஆகியவற்றுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. எர்மன் கார்ல் வோகல் ஆகஸ்ட் 13, 1907ல் ஜெர்மனி போட்சுடாமில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.