• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஊசொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தாவுக்கு சன்மானம் ஐந்து கோடியா?

கடந்த டிசம்பர் 17 அன்றுவெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் சமந்தாஅந்தப் பாடலில் அவரது நடன அசைவுகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக யூடியூப் தளத்தில் வெளியாகியிருந்த இந்த பாடல் 20 மில்லியன் பார்வைகளை இதுவரை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலில் தனது ஆட்டத்திற்காக நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த புதிய விவரம் வெளியாகி உள்ளது. 3 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் மட்டும் திரையில் வரக்கூடிய இந்த பாடலுக்கு அவர் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அவர் இந்த பாடலுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருந்தார் என்ற தகவல் வெளியானது.“நான் இந்த பாடலில் நடனமாட காரணமே நடிகர் அல்லு அர்ஜூன்தான். இப்போது இந்த பாடல் தேசிய அளவில் வைரலாகி உள்ளது. அதற்காக நான் அல்லு அர்ஜூனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என சமந்தா தெரிவித்துள்ளார்.