• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தாய்பாலின்றி தவிக்கும் குழந்தைகளின் பசி பினியை போக்க – இதோ வந்தாச்சி தாய்பால் 247 ஏ.டி.எம்.

BySeenu

Feb 26, 2024

பச்சாபாளையம் பகுதியில் 247 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள். தாய்ப்பால் பருகி வளரும் குழந்தைகள் ஆரோக்கியமுடன் வளரும். நவீன உலகில் மாறி போகும் உணவு பழக்க வழக்கத்தால், தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து, பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைப்பதில்லை. இந்த நிலையிலே குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதற்காக, மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் அது அனைத்து நேரத்திலும் கிடைப்பதில்லை என்பதனால் – 247 தாய்ப்பால் விநியோகம் செய்யப்படும் வகையில், கோவையில் தாய்ப்பால் ஏ.டி.எம். 247, கோவை பச்சாபாளையத்தில் திறக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்டரில் அமைந்துள்ள தாய்ப்பால் 247 ஏடி.எம்.மில் 24 மணி நேரமும் இலவசமாக தாய்ப்பால் விநியோகம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். தன்னார்வலர்கள் வாயிலாக, பால் சுரப்பு அதிகமாக இருக்கும் தாய்மார்களிடம், உளவியல் ரீதியாக எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்து, தாய்ப்பாலை தானமாக பெற்று அதனை முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தி அந்த பால் மற்ற குழந்தைகளுக்கு ஊட்ட உகந்ததென முறையாக பரிசோத்தித்து மருத்துவர்கள் சான்றிதழ் தந்த பின்னர், இந்த தாய்ப்பால் 247 ஏடிஎம்மில் சேகரித்து வைக்கின்றனர். சேகரிக்கப்பட்ட இந்த தாய்ப்பால் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைப்பார்கள்.தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு, பச்சிளம் குழந்தைகள் மருத்துவர்கள் தருகின்ற பரிந்துரை சான்றிதலுடன், தாய்ப்பால் விநியோகம் செய்யும் ஏடிஎம்மில் அணுகினால், இலவசமாக 24 மணி நேரமும் தாய்பாலை பெற்றுக் கொள்ளலாம். குழந்தை பெற்று உடல் நல குறைவால் அவதிப்படும் தாய்மார்களிடமிருந்து, பச்சிளம் குழந்தைகள் பால் இன்றி தவிர்க்கும் நிலையை போக்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த தாய்ப்பால் 247 ஏ.டி.எம்., ஆரோக்கியமான குழந்தைகள் வளர அடித்தளமாக அமையும் என்று தானம் செய்வோர், தன்னார்லவர்கள், தாய்பால் 24*7 ஏ.டி.எம். நிர்வகிப்பாளர்கள் தெரிவித்தனர் .